மேலும் செய்திகள்
கள்ளச்சாராயம் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
12-Feb-2025
- நமது நிருபர் -திருப்பூர் மாவட்ட மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில், கள்ளச்சாராயம் மற்றும் போதைப்பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம், கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. கலெக்டர் கிறிஸ்துராஜ் கொடியசைத்து துவக்கி வைத்தார். மகளிர் திட்ட இயக்குனர் சாம் சாந்தகுமார், 'டாஸ்மாக்' மாவட்ட மேலாளர் பண்டரிநாதன் உள்பட அதிகாரிகள் பங்கேற்றனர். கரகாட்ட கலைஞர்களின் மேளதாள நடனத்துடன், எல்.ஆர்.ஜி., கல்லுாரி மாணவியர், 'கள்ளச்சாராயத்தால் சாவு நிச்சயம்', உட்பட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு ஊர்வலமாக சென்றனர்.
12-Feb-2025