உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / விழிப்புணர்வு முகாம்

விழிப்புணர்வு முகாம்

காங்கயம்; திருப்பூர் மாவட்ட போலீஸ் துறையின் மனித உரிமை பிரிவு சார்பில் விழிப்புணர்வு முகாம், காங்கயத்தில் நடந்தது.திருப்பூர் மாவட்ட போலீஸ் துறையின் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பில், காங்கயம் பழனியப்பா மகாலில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.எஸ்.பி., கிரிஷ் அசோக் யாதவ் தலைமை வகித்தார். மனித உரிமை பிரிவு டி.எஸ்.பி., வெற்றிவேந்தன், காங்கயம் டி.எஸ்.பி., மாயவன் முன்னிலை வகித்தனர். அரசு வக்கீல்கள் மனோகரன், இந்துமதி ஆகியோர் மனித உரிமைகள் குறித்து விளக்கினர். விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. முகாம் ஏற்பாடுகளை இன்ஸ்பெக்டர்கள் அனந்தநாயகி, செல்வநாயகம் ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !