உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாணவருக்கு விழிப்புணர்வு

மாணவருக்கு விழிப்புணர்வு

திருப்பூர்: துப்புரவாளன் அமைப்பு சார்பில், பள்ளிகளில் மாணவர்களுக்கு திடக்கழிவு மேலாண்மை குறித்தும், என் குப்பை என் பொறுப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சுற்றுப்புற சுகாதாரம் ஆகியன குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சியில் நடத்தப்படுகிறது.அவ்வகையில், நேற்று புதுராமகிருஷ்ணாபுரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் இம்முகாம் நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் ராஜேஸ்வரி வரவேற்றார். துப்புரவாளன் அமைப்பு இயக்குநர்கள் மோகன் குமார், சந்தோஷ் ஆகியோர் திடக்கழிவு மேலாண்மையின் அவசியம் மற்றும் நடைமுறை குறித்து விளக்கினர்.பள்ளி வளாகம் மாசுபடுவதைக் தடுக்கும் வகையில், குப்பை சேகரிக்க, 'யாச்ட் பொட்டிக்' சார்பில், 10 கூடைகள் வழங்கப்பட்டன. மாணவ, மாணவியர் 'என் குப்பை - என் பொறுப்பு' என்று பாலிதின் பயன்பாடு தவிர்த்தல், திடக்கழிவு மேலாண்மை பின்பற்றுதல் குறித்தும் உறுதிமொழி ஏற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை