கல்லுாரி மாணவருக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி
திருப்பூர்: சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, மாவட்ட சமூக நலத்துறை சார்பில், திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி, குமரன் அரங்கில் 'பெண் குழந்தைகளை காப்போம்; பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்' எனும் தலைப்பில், விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். பேராசிரியர் அமிர்தராணி வரவேற்றார். குழந்தை திருமணம், இளம் வயது கர்ப்பத்தைத் தடுத்தல், பெண் குழந்தைகள் கல்வி கற்பதை ஊக்குவித்தல், உயர்கல்வி குறித்து மாணவியரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. முன்னாள் குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் மல்லீஸ்வரன், உடுமலை ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாகி ராஜேஸ்வரி, ஆகியோர் குழந்தை திருமணம் தடை சட்டம் குறித்து பேசினர்.