மேலும் செய்திகள்
மாற்றுத்திறனாளிகள் சங்கம் திருப்போரூரில் மாநாடு
24-Jun-2025
திருப்பூர்: தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகளின் வாழ்வுரிமை நல சங்கங்-களின் கூட்டமைப்பு மற்றும் திருப்பூர் கிளை சங்கம் சார்பில், அரசு திட்டங்கள் பற்றிய விழிப்புணர்வு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருப்பூரில் நேற்று நடந்தது.மாநில தலைவர் ராஜரத்தினம் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் துர்க்கப்பன் வரவேற்றார். திருப்பூர் புதிய, மத்திய பஸ் ஸ்டாண்டில் மாநகராட்சி சார்பில் செயல்படும் கட்டடங்களில் மாற்றுதிறனாளிகளின் வாகனம் கட்டணமின்றி நிறுத்துவதற்கு இடவசதி செய்து தர வேண்டும்.இலவச வீட்டு மனை பட்டா, அடுக்குமாடி குடியிருப்பு விண்-ணப்பம் அளித்து பல ஆண்டுகளாக காத்திருக்கும் மாற்றுதிறனா-ளிகளுக்கு உடனே நடவடிக்கை எடுத்து தீர்வு காண வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
24-Jun-2025