உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கழிப்பிடத்தில் பிறந்த குழந்தை

கழிப்பிடத்தில் பிறந்த குழந்தை

திருப்பூர்: திருச்சியை சேர்ந்த 30 வயது பெண், திருப்பூரில் தங்கி வேலை செய்யும் போது, உடன் வேலை செய்யும் ஒருவரை காதலித்து வந்தார். இரு வீட்டாருக்கும் தெரிவிக்காமல் இருவரும் திருமணம் செய்தனர்.இதனையடுத்து, பி.என்., ரோட்டில் உள்ள வாடகைக்கு எடுத்து வசித்து வந்தனர். ஏழு மாத கர்ப்பிணியாக இருந்த அந்தப்பெண் நேற்று முன்தினம் இரவு, மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாப்பில் உள்ள பொதுகழிப்பிடத்துக்கு சென்றார். நீண்ட நேரமாக வெளியே வராமல் இருந்தார். அங்கிருந்த பணியாளர், கதவை தட்டி பார்த்தும் திறக்கவில்லை.பின் கதவை உடைத்து பார்த்த போது உள்ளே மயங்கிய நிலையில், ஆண் குழந்தை பிறந்து மயக்க நிலையில் இருந்தது. இருவரையும் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பரிசோதனையில் குழந்தை இறந்தது தெரிந்தது. பெண் சிகிச்சை பெற்று வருகிறார். திருப்பூர் வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி