உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பேக்யார்ட் அல்ட்ரா மாரத்தான் திருப்பூர் வீரர்கள் பங்கேற்பு

பேக்யார்ட் அல்ட்ரா மாரத்தான் திருப்பூர் வீரர்கள் பங்கேற்பு

திருப்பூர் : கோவையில் நடந்த 'கோவை பேக்யார்ட் அல்ட்ரா' மாரத்தான் நிகழ்வில் திருப்பூர் ரன்னர்ஸ் கிளப் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.கோவை குமரகுரு பொறியியல் கல்லுாரியில், 'பேட்டில் கிரவுண்ட்' அமைப்பு சார்பில் 'கோவை பேக்யார்ட் அல்ட்ரா' என்ற பெயரில் மாரத்தான் போட்டி நடந்தது. ஒரு மணி நேரத்தில் 6.7 கி.மீ.,துாரத்தை கட்டாயம் எட்ட வேண்டும். இதனை ஒவ்வொரு கட்டத்திலும், 60 நிமிடத்துக்குள் கடந்து வரும் போட்டியாளர் மட்டுமே அடுத்த கட்டத்தில் பங்கேற்க முடியும். அறுபது நிமிடத்துக்கு மேல் எடுத்துக் கொள்வோர் அந்த கட்டத்திலேயே வெளியேற்றப்படுவார். கடைசி ஒரு பங்கேற்பாளர் உள்ளவரை இந்த நிகழ்வு தொடர்ந்து நடைபெறும்.அவ்வகையில், கோவையைச் சேர்ந்த சந்தோஷ் 37 கட்டங்களில் மொத்தம் 247.9 கி.மீ., கடந்து முதலிடம் பெற்றார். இதில் திருப்பூர் ரன்னர்ஸ் கிளப்பைச் சேர்ந்த, 10 பேர் பங்கேற்றனர். அவர்களில் சதீஷ், 18வது கட்டத்தில் 120.6 கி.மீ., கடந்தார். காண்டீபன் மற்றும் நந்தகுமார் இருவரும், 15 கட்டங்களில் 100.5 கி.மீ., கடந்தனர்.அதேபோல், நித்யா, சரவணன், இளங்கோ, பழனிகுமார், பாலசங்கர், நாராயணன் மற்றும் சம்பத் ஆகியோர் பேக்யார்ட் 4வது பிரிவில் 26.8 கி.மீ., கடந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ