மேலும் செய்திகள்
அரசு பள்ளியில் விழிப்புணர்வு
08-Jun-2025
திருப்பூர்; சர்வதேச போதை தடுப்பு விழிப்புணர்வு நாளில், திருப்பூரில் பயிலும் மாணவ, மாணவியர், போதைக்கெதிராக உறுதிமொழி மேற்கொண்டனர்.திருப்பூர் மாநகர போலீசார் சார்பில் போதை தடுப்பு விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி, ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. மூன்றாயிரம் மாணவியர் பங்கேற்றனர். பள்ளி தலைமை ஆசிரியர் ஸ்டெல்லா அமலோற்பவமேரி வரவேற்றார்.போலீஸ் உதவி கமிஷனர் (போக்குவரத்து) சேகர் பேசுகையில், ''உறவினர், உடன் பிறந்தோர், பெற்றோர் போதைப்பொருள் பயன்படுத்தினால், அவர்களை அப்பழக்கத்தில் இருந்து மீட்கவே, போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. போதையில் இருக்கும் நபர்களால் எந்த சூழ்நிலையிலும் பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாக மாறலாம். போதையில் சிக்குபவர்களை மீட்டெடுக்க வேண்டும்.போதைப்பொருள் விற்பனை குறித்து தெரிய வந்தால், போலீஸ் உதவி எண் 100க்கு அழைத்து தைரியமாக தகவல் சொல்லுங்கள். யாருக்கும் பயப்பட வேண்டாம். உங்கள் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும். உடல் நலத்துக்கு, சமுதாய நலத்துக்கும் போதைப்பொருள் கெடு விளைவிக்கும்'' என்றார்.முன்னதாக, திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி இறைவணக்க கூட்டத்தில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதில், மாணவர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
08-Jun-2025