மேலும் செய்திகள்
'பாயும்' புலியான ஆபீசர் 'பதுங்குவது' ஏனோ...
11-Mar-2025
திருப்பூர் : 'பாங்க் ஆப் மஹாராஷ்டிரா' வங்கியின் 4வது கிளை தாராபுரம் ரோடு, திருப்பூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை எதிரே அமைக்கப்பட்டு, அதன் திறப்பு விழா நேற்று நடந்தது.வங்கி கிளை மேலாளர் ராஜசரவணன் வரவேற்றார். கலெக்டர் கிறிஸ்துராஜ், கிளையை திறந்து வைத்தார். அரசு மருத்துவக்கல்லுாரி 'டீன்' (பொறுப்பு) பத்மினி, ஏ.டி.எம்., மையத்தை திறந்து வைத்தார். கலெக்டர் கிறிஸ்துராஜ், அரசு மருத்துவக்கல்லுாரி 'டீன்' டாக்டர். பத்மினி, மாவட்ட முன்னோடி வங்கி (கனரா) மேலாளர் துர்கா பிரசாத், வங்கியின் மண்டல முதன்மை மேலாளர் அஞ்சு ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி வைத்தனர்.மண்டல முதன்மை மேலாளர் அஞ்சு பேசுகையில், ''கோவை மண்டல அளவில், 46 கிளையாகவும், திருப்பூர் மாவட்டத்தின் 4வது கிளையாகவும் திறக்கப்பட்டுள்ளது. தொழில் வாய்ப்பு அதிகம் உள்ள நகரங்களில் வங்கி கிளையை துவக்கி, நிதி சார்ந்த சேவையை வழங்கி வருகிறோம். திருப்பூர் மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் செயல்படுவோம்,'' என்றார்.கலெக்டர் பேசுகையில், ''தொழில்துறையினர் மட்டுமல்லாது, பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மக்களுக்கும் சேவை வழங்க வேண்டும். குறிப்பாக, கல்விக்கடன், தொழிற்கடன், தொழில்முனைவோர் கடன் அதிக அளவு வழங்க, வழங்க முன்வர வேண்டும்,'' என்றார்.வங்கியின் மண்டல முதுநிலை மேலாளர் பிரைட்சன் நன்றி கூறினார்.
11-Mar-2025