உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பனியன் தொழிலாளருக்கு 120% சம்பள உயர்வு தேவை

பனியன் தொழிலாளருக்கு 120% சம்பள உயர்வு தேவை

திருப்பூர்; பனியன் தொழிலாளர் முன்னேற்ற சங்க மாவட்ட செயலாளர் மனோகரன் அறிக்கை: கடந்த, 2021 செப்., மாதம் நிறைவேறிய ஒப்பந்தத்தில் உள்ள நடைமுறை சம்பளத்தை, 120 சதவீதம் உயர்த்தி வழங்க வேண்டும். 'பீஸ்ரேட்' தொழிலாளருக்கு, 15 ஆயிரத்துக்கு, மாதம், 5,000 ரூபாயும், அதற்கு மேல், ஒவ்வொரு புள்ளிக்கும், 70 பைசா வீதமும் பஞ்சப்படி வழங்க வேண்டும். பயணப்படி, டீ பேட்டாவை, 100 சதவீதம் உயர்த்தி வழங்க வேண்டும். தொழிலாளர் ஆறு மாதம் பணியாற்றியிருந்தால், தொழிலாளி மரணமடைந்தால், குடும்ப நல நிதியாக, ஒரு லட்சம் ரூபாய் வழங்க வேண்டும். ஓராண்டு பணியாற்றியவருக்கு, 10 ஆயிரம் ரூபாய், 2 ஆண்டுகள் பணியாற்றியிருந்தால், 15 ஆயிரம் ரூபாய், மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியவருக்கு, 20 ஆயிரம் திருமண நிதியுதவி வழங்க வேண்டும். ஒப்பந்தம் காலாவதியான பிறகு, அடுத்த ஒப்பந்தம் ஏற்படும் வரை, புதிய சம்பள ஒப்பந்த அடிப்படையில், பின்பாக்கி சம்பள தொகை வழங்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை