உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  பேட்டரி திருட்டு; இருவர் கைது

 பேட்டரி திருட்டு; இருவர் கைது

பல்லடம்: பல்லடம் -பொள்ளாச்சி ரோடு, சித்தம்பலத்தை சேர்ந்தவர் சுரேஷ், 54. ஆட்டோ எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில், 4 லட்சம் ரூபாய் மதிப்புடைய, 48 பேட்டரிகள் திருடு போயின. பல்லடம் போலீசார், 'சிசிடிவி' காட்சிகளின் உதவியுடன், விருதுநகர் மாவட்டம், ஆச்சாங்குளம் துரை, 51; தாராபுரம் கார்த்திகேயன், 23 ஆகியோரை கைது செய்தனர். பேட்டரிகள், கார் பறிமுதல் செய்யப்பட்டன. இருவர் மீதும் திருநெல்வேலி, ஸ்ரீவில்லிபுத்துார் மற்றும் திருப்பூர் மாவட்ட போலீஸ் ஸ்டேஷன்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன. இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, பல்லடம் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ