உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பெங்களூரு இன்டர்சிட்டி ரயில் எல்.எச்.பி., பெட்டியாக மாற்றம்

பெங்களூரு இன்டர்சிட்டி ரயில் எல்.எச்.பி., பெட்டியாக மாற்றம்

திருப்பூர் : கோவை, திருப்பூர் வழியாக பயணிக்கும் பெங்களூரு இன்டர்சிட்டி ரயில் இன்று முதல் எல்.எச்.பி., பெட்டிகள் கொண்டதாக மாற்றப்படுகிறது.தினமும் காலை, 9:10 மணிக்கு, எர்ணாகுளத்தில் புறப்படும் இன்டர் சிட்டி எக்ஸ்பிரஸ் (எண்:12678) மதியம், 12:50 மணிக்கு கோவை வரும். 1:35 மணிக்கு திருப்பூரை கடந்து, இரவு 9:00 மணிக்கு பெங்களூரூ சென்றடையும். ஏழு பொது பெட்டி உட்பட, 20 பெட்டிகளை கொண்ட இந்த ரயிலில், மேற்கு மண்டலம் வழியாக பகலில் பெங்களூருக்கு இயங்கும் ஒரே ரயில் என்பதால் கூட்டம் எப்போதும் நிறைந்து வழியும். முன்பதிவும் சுறுசுறுப்பாக இருக்கும்.இதனால், பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என பயணிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இக்கோரிக்கையை ஏற்றுக் கொண்ட ரயில்வே இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலை எல்.எச்.பி., அதிநவீன வசதி கெண்ட பெட்டிகளுடன் கூடிய ரயிலாக மாற்றியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை