உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சாலையில் தடுப்புச்சுவர் பாரத் சேனா அதிரடி

சாலையில் தடுப்புச்சுவர் பாரத் சேனா அதிரடி

பல்லடம்; பல்லடம் அடுத்த, மாதப்பூர் அருகே, தேசிய நெடுஞ்சாலையின் ஒரு பகுதியில், வாகனங்கள் வந்து செல்ல வசதியாக மைய தடுப்பில் இடைவெளி விடப்பட்டிருந்தது. சட்ட விரோதமாக இந்த இடைவெளி விடப்பட்டிருப்பதாகவும், விபத்து அபாயம் ஏற்பட்டு வருவதாகவும் கூறி, பாரத் சேனா புகார் தெரிவித்தது. அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், பாரத் சேனா அமைப்பினர், தாங்களே தடுப்பு சுவர் கட்ட முயற்சித்தனர். பல்லடம் போலீசார், அமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து, தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகளை, போலீசார் தொடர்பு கொண்டு பேசினர். அதில், ஓரிரு நாட்களில் மையத்தடுப்பு இடைவெளி மூடப்படும் என, உறுதி அளிக்கப்பட்டது. இதனால், போலீசார் தற்காலிகமாக மையத்தடுப்புகளை வைத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை