உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பூமி பூஜை போட்டும் கிடப்பில் சாலைப்பணி

பூமி பூஜை போட்டும் கிடப்பில் சாலைப்பணி

அனுப்பர்பாளையம் : திருப்பூர் மாநகராட்சி, 7வது வார்டு, போயம்பாளையம் மாரியம்மன் கோவில் வீதியில் நான்கு வீதிகள் உள்ளன. இங்கு 70க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதி ஊராட்சியாக இருந்தபோது, ரோடு போடப்பட்டது. ஏறத்தாழ, ஆண்டு களாகிறது.ரோடு போடப்பட்டு பல ஆண்டுகள் ஆவதால், ரோடு முழுவதும் குண்டும் குழியுமாக முட்புதர்கள் முளைத்து ஒற்றையடிப் பாதையாக காட்சியளிக்கிறது. இப்பகுதியில், ரோடு போட மாநகராட்சி சார்பில், 20 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஒன்பது மாதங்களுக்கு முன் பூமி பூஜையும் நடத்தப்பட்டது. நிதி ஒதுக்கீடு செய்து, பூமி பூஜையுடன் ரோடு போடும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. இன்று வரை ரோடு போடும் பணி நடைபெறவில்லை.அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:இப்பகுதிக்கு ரோடு கேட்டு பல ஆண்டுகளாக மனு கொடுத்து வருகிறோம். அதிகாரிகள் மக்கள் பிரதிநிதிகள் கண்டு கொள்ளா போக்கில் உள்ளனர். நிதி ஒதுக்கீடு செய்து பூமி பூஜை போட்டனர். சந்தோஷப்பட்டோம். ஆனால் பூமி பூஜையோடு நின்று விட்டது. இன்னும் ரோடு போடவில்லை. கேட்டால் எந்த பதிலும் இல்லை.ரோடு முழுவதும் குண்டும் குழியுமாக உள்ளதால் மழை நேரங்கள் மழைநீர் தேங்கி நடந்துகூட செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. ரோடு இல்லாததால் முட்புதர்கள் மண்டி உள்ளது. விஷ ஜந்துகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. மழை நேரங்களில் வீட்டுக்குள் வந்து விடுகிறது. குடியிருக்கவே அச்சமாக உள்ளது. உடனடியாக ரோடு போட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.இது குறித்து, அப்பகுதி வார்டு கவுன்சிலர் கவிதா கூறுகையில், ''ரோடு போட விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கு முன் முட்செடிகள் அகற்றி சுத்தம் செய்யப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ