கஞ்சா கடத்தல்: பீஹார் வாலிபர் கைது
அவிநாசி: பல்லடம் அருகே சுக்கம்பாளையத்தில் வசிப்பவர் பீஹார் மாநிலம், பாட்னாவை சேர்ந்தவர் ராம்நாத் சஹானி, 44. கடந்த வாரம் தனது சொந்த ஊருக்கு சென்று விட்டு திரும்பியபோது அங்கிருந்து கஞ்சாவை கடத்தி வந்து திருப்பூர் பகுதியில் வேலை செய்யும் நபர்கள் மற்றும் கல்லுாரி மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்தார். இதுகுறித்த தகவலின் பேரில், அவிநாசி மதுவிலக்கு போலீசார் நேற்று குன்னத்துார் அருகே தாளப்பதி பஸ் ஸ்டாப்பில் கஞ்சாவை விற்பனை செய்ய வந்த ராம்நாத் சஹானியை கைது செய்து, அவரிடமிருந்து இரண்டு கிலோ 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.