மேலும் செய்திகள்
பா.ஜ.,வினர் மூவர்ண கொடி யாத்திரை
14-Aug-2025
மக்களிடம் இருந்து வரிகளை வசூலிக்கும் மாநகராட்சி, குப்பை விவகாரத்தை அலட்சியமாக கையாள்கிறது. திடக்கழிவு மேலாண்மை திட்டம் தோல்வியடைந்துள்ளது என, அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து பா.ஜ., திருப்பூர் வடக்கு மாவட்டம் சார்பில், மாநகராட்சியில் உள்ள, 60 வார்டுகளிலும் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குப்பை கொட்டியுள்ள இடத்தில் கட்சியினர் திரண்டு நுாதனமாக போராட்டம் நடத்தினர். வாழை இலையில் குப்பை திருப்பூர் லட்சுமி நகரில் மாவட்ட தலைவர் சீனிவாசன் தலைமையில் குப்பை கொட்டிய இடத்தில் தர்ணா செய்தனர். குப்பையால் கடும் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது என்பதை விளக்கும் வகையில், வாழை இலையை விரித்து, அதில் குப்பையை கொட்டி நுாதனப்போராட்டம் மேற்கொண்டனர். குப்பை மலர் வளையம் காந்தி நகர் பஸ் ஸ்டாப் அருகே அங்கேரிபாளையம் மண்டலத் தலைவர் சுதாமணி தலைமையில் போராட்டம் நடந்தது. 'சவப்பெட்டியில் மக்கள் வரிப்பணம்' என்ற வாசகத்துடன் சவப்பெட்டியை வைத்து, அதில் குப்பை மலர் வளையம் வைத்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, மாநகராட்சியின் குப்பை வரி எங்கே செல்கிறது என்பதை கேட்கும் விதமாக, 'குப்பை வரி காசோலை' உருவாக்கி, 120 கோடி ரூபாய் வீணாக்கப்படுவதை சுட்டிக்காட்டினர். திருப்பூர் பூ மார்க்கெட்டில் செரங்காடு மண்டலம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மண்டல தலைவர் மந்தராசல மூர்த்தி, மாவட்ட செயலாளர் கார்த்தி, ஓ.பி.சி., மாநில செயற்குழு உறுப்பி னர் அய்யப்பன் உட்பட பலர் பங்கேற்றனர். மார்க்கெட்டில் ஆரம்பித்து, குப்பை கொட்டப்பட்ட இடம் வரை ஊர்வலம் நடந்தது. முற்றுகையிடுவோம் குப்பை பிரச்னையில், இரு வாரங்களுக்குள் தீர்வு ஏற்படுத்த வேண்டும். திட்டங்களில் முறைகேடுகள் நடந்துள்ளது. இதுதொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். இல்லையென்றால், மாநகராட்சி அலுவலகத்தை மக்களுடன் முற்றுகையிட்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். - சீனிவாசன்,தலைவர்,திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ.,
14-Aug-2025