உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வெடி வைத்து குழி தோண்டும் பணி 

வெடி வைத்து குழி தோண்டும் பணி 

திருப்பூர்; பாதாள சாக்கடை குழி தோண்டும் பணிக்கு வெடி மருந்து பயன்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூர் மாநகராட்சி பகுதியில் பல்வேறு வார்டுகளில் பாதாள சாக்கடை இணைப்புகள் வழங்கும் பணி நடக்கிறது. அவ் வகையில், தற்போது, 46வது வார்டுக்கு உட்பட்ட வி.ஜி.வி. கார்டன் 20வது வீதியில் பாதாள சாக்கடை திட்டத்தில் குழாய் பதிக்க குழி தோண்டும் பணி நடக்கிறது. இப்பணியில் நேற்று ஈடுபட்ட ஊழியர்கள், கடுமையான பாறைகள் நிறைந்த ஒரு இடத்தில் குழி தோண்ட முடியாமல் வெடி மருந்து பயன்படுத்தியுள்ளனர். இதனால் அருகேயுள்ள வீடுகளில் லேசான அதிர்வு உணரப்பட்டது. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் வீட்டிலிருந்து வெளியே வந்து பார்த்த போது, குழி தோண்டும் பணியில் வெடி மருந்து பயன்படுத்தியது தெரிந்தது. அங்கு திரண்ட பொதுமக்கள் இது போல் வெடி மருந்து பயன்படுத்தக் கூடாது; இயந்திரம் மூலம் குழி ஏற்படுத்தி குழாய் பதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். அதை ஏற்றுக் கொண்ட ஊழியர்கள் இயந்திரம் வரவழைத்து பணியைத் தொடர்ந்தனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி