உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குருதிக் கொடை; 31 யூனிட் சேகரிப்பு

குருதிக் கொடை; 31 யூனிட் சேகரிப்பு

தி திருப்பூர் கிளப் மற்றும் முயற்சி மக்கள் அமைப்பு சார்பில், ரத்ததான முகாம், அவிநாசி ரோட்டிலுள்ள தி திருப்பூர் கிளப்பில் நேற்று நடைபெற்றது. கிளப் செயலாளர் சண்முகம் துவக்கி வைத்தார். முயற்சி அமைப்பு தலைவர் சிதம்பரம் முன்னிலை வகித்தார். தி திருப்பூர் கிளப் உறுப்பினர்கள், அலுவலர்கள் பங்கேற்று, ரத்த தானம் செய்தனர். அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவர்கள், செவிலியர்கள் ரத்தம் சேகரித்தனர்; மொத்தம், 31 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டது. ரத்த கொடையாளர்களுக்கு பாராட்டு சான்று வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி