உள்ளூர் செய்திகள்

 ரத்த தான முகாம்

திருப்பூர்: திருப்பூர் ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்தில் ரத்த தானம் முகாம் நடந்தது. திருப்பூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை மற்றும் திருப்பூர் மெல்வின் ஜோன்ஸ் லயன்ஸ் கிளப் உடன் இணைந்து திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், இந்திய அரசியலமைப்பு தினத்தையொட்டி ரத்த தானம் முகாம் ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்தில் நடந்தது. திருப்பூர் முதலாவது கூடுதல் மாவட்ட கோர்ட் நீதிபதி பத்மா துவக்கி வைத்தார். மாவட்ட நீதிபதி செல்லதுரை, தலைமை நீதித்துறை நடுவர் மோகனவள்ளி, திருப்பூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை டாக்டர் ஹரிணி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ