புளூபேர்டு மெட்ரிக் பள்ளி 10ம் வகுப்பு ரிசல்ட்டில் அசத்தல்
பல்லடம் : பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளில், பல்லடம் புளூபேர்டு பள்ளி மாணவர்கள், அபார சாதனை புரிந்துள்ளனர்.இப்பள்ளி மாணவி, ெஷக்கின் பொன் ஆல்டரி, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், 500க்கு, 495 மதிப்பெண் பெற்று, முதலிடம் பெற்றுள்ளார். பள்ளி தாளாளர் ராமசாமி, பள்ளி நிர்வாகிகள் ஜெயபிரபா, சுகப்பிரியா, பள்ளி முதல்வர் ஜெயலட்சுமி, பள்ளி துணை முதல்வர் ரோஸிவைலட் உள்ளிட்டோர் முதலிடம் பெற்ற மாணவி ெஷக்கின் பொன் ஆஸ்டரிக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர். நிகழ்ச்சியில் பெற்றோர், ஆசிரியர்கள் உடனிருந்தனர்.பள்ளி தாளாளர் ஜெயபிரபா கூறுகையில், ''எங்கள் பள்ளி, 41 ஆண்டுகளாக வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வில், நுாறு சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்து வருகிறது.இந்தாண்டு பொதுத்தேர்வு எழுதிய, 161 மாணவ, மாணவியரும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர். 40க்கும் மேற்பட்ட மாணவர்கள், 480க்கும் மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர்.சாதனை படைத்த மாணவர்கள், உறுதுணையாக இருந்த ஆசிரியர்களுக்கும் வாழ்த்துகள்,'' என்றார்.