உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பள்ளிகளுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

பள்ளிகளுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

திருப்பூர் : திருப்பூர், ராக்கியாபாளையம் தனியார் பள்ளியில், 1,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். நேற்று காலை பள்ளிக்கு வந்த இ - மெயிலில், வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. பள்ளி நிர்வாகம் அனைத்து மாணவர்களின் பெற்றோருக்கும் தகவல் அளித்து, மாணவர்களை அழைத்துச் செல்ல அறிவுறுத்தியது. பெற்றோர் அழைத்து சென்றனர். பள்ளிக்கு இருநாள் விடுமுறை விடப்பட்டது.நல்லுார் போலீசார் மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு சிறப்பு போலீசார் சோதனை செய்தனர். ஐந்து மணி நேர சோதனைக்கு பின், தகவல் புரளி எனத் தெரிந்தது. மிரட்டல் விடுத்த நபர் குறித்து விசாரிக்கின்றனர். திருவாரூர் மாவட்டம், செங்காங்காடு அரசு உயர்நிலைப் பள்ளிக்கும், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு பேசி, வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. வெடிகுண்டு நிபுணர்கள், சோதனை நடத்தியதில் புரளி என தெரியவந்தது.விசாரணையில், அப்பள்ளியில் படிக்கும் ஒன்பதாம் வகுப்பு மாணவர் ஒருவர், தெற்குகாடு கிராமத்தில் இருந்து பேசியது தெரிந்தது. நேற்று, சமூக அறிவியல் தேர்வு நடக்க இருந்தது. தேர்வுக்கு படிக்காததால், வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. முத்துப்பேட்டை போலீசார், மாணவர் மற்றும் பெற்றோரிடம் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ