உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மார்பகம், கருப்பை வாய் புற்றுநோய் சோதனை முகாம்

மார்பகம், கருப்பை வாய் புற்றுநோய் சோதனை முகாம்

அனுப்பர்பாளையம்; அங்கேரிபாளையத்தில், திருப்பூர் மெட்டல் டவுன் ரோட்டரி, மேட்டுப்பாளையம் கோவை மெடிக்கல் சென்டர் இணைந்து நடத்திய மார்பக மற்றும் கருப்பைவாய் புற்று நோய் சிறப்பு விழிப்புணர்வு மற்றும் பரிசோதனை முகாம் நடைபெற்றது.மெட்டல் டவுன் ரோட்டரி சங்க தலைவர் பழனிசாமி துவக்கி வைத்தார். ரோட்டரி சங்க முன்னாள் மாவட்ட கவர்னர் கார்த்திகேயன், திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆனந்தராம் மற்றும் நிர்வாகிகள் சரஸ்வதி, ரவிச்சந்திரன், மண்டல ஒருங்கிணைப்பாளர் கோவிந்தராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினர்.முகாமில், 80க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு உடல் பரிசோதனை செய்து கொண்டனர். சங்க செயலாளர் ரவிச்சந்திரன், பொருளாளர் பரமேஸ்வரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை