மேலும் செய்திகள்
கூடுதல் ரயில் இயக்க பயணியர் வேண்டுகோள்
26-Aug-2025
உடுமலை, ; உடுமலை கொழுமம் ரோட்டில், ரயில்வே கேட் அடிக்கடி மூடப்படுவதால், மக்கள் உரிய நேரத்தில் செல்ல முடியாமல் பாதிக்கப்படுகின்றனர். அங்கு மேம்பாலம் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவை - திண்டுக்கல் அகல ரயில்பாதை வழித்தடத்தில் உடுமலை ரயில்வே ஸ்டேஷன் உள்ளது. இதன் வழியாக, கோவை - மதுரை, திருவனந்தபுரம் - மதுரை, பாலக்காடு - சென்னை, பாலக்காடு - திருச்செந்துார், மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி ஆகிய ரயில்கள் இயக்கப்படுகின்றன. உடுமலை நகரில் ராமசாமி நகர், கொழுமம் ரோட்டில் ரயில்வே 'கேட்'டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இவை ஒரு நாளைக்கு ரயில் செல்லும் போது, பல முறை அடைக்கப்படுகின்றன. மீண்டும் திறக்கப்படுவதற்கு நீண்ட நேரம் ஆகிறது. அப்போது, வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வாகன ஓட்டுனர்களும், பொதுமக்களும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர். எனவே, கொழுமம் ரோட்டில் வாகனங்கள் செல்லும் வகையில், மேம்பாலம் அமைக்க ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
26-Aug-2025