பில்ட் எக்ஸ்போ -- 25 திருப்பூரில் 4 நாள் நடக்கிறது
திருப்பூர்; திருப்பூர் மாவட்ட கட்டட பொறியாளர் சங்கம் சார்பில், 'பில்ட் எக்ஸ்போ 25' கண்காட்சி வரும், 11ம் தேதி துவங்கி, 14ம் தேதி வரை நான்கு நாள் நடைபெறுகிறது.இதுகுறித்து அச்சங்க தலைவர் மோகன்ராஜ், கண்காட்சி குழு தலைவர் குழந்தை குமார் கூறியதாவது:திருப்பூர், காங்கயம் ரோடு, காயத்ரி மஹாலில் இக்கண்காட்சி துவக்க விழா வரும், 11ம் தேதி காலை 9:00 மணிக்கு நடைபெறவுள்ளது. மேயர் தினேஷ்குமார், எம்.டி.ஏ., ஆர்கிடெக்ட்ஸ் உமாசங்கர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கின்றனர்.மேலும், கே.ஆர்.ஜி.,நிறுவன தலைவர் ராஜகோபால், லீபுளு நிறுவன தலைவர் பாலு உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.இக்கண்காட்சி, 3வது ஆண்டாக நடக்கிறது. தினமும், காலை, 10:00 முதல் இரவு 8:00 மணி வரை பொதுமக்கள் பார்வையிடலாம். அனுமதி இலவசம். கட்டடங்களுக்கு தேவையான அனைத்து கட்டுமானப் பொருட்கள், உபகரணங்கள் உள்ளிட்டவற்றின் உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனங்கள் தங்கள் ஸ்டால்களை அமைக்கவுள்ளன.இதில் சிமென்ட், இரும்பு, பெயின்ட், மணல், ஹாலோ பிளாக், பேவர் பிளாக், டைல்ஸ், கிரானைட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் இடம் பெறவுள்ளன. இண்டீரியர் மற் றும் எக்ஸ்டீரியர் டிசைன் நிறுவனங்கள், எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ் உபகரணங்கள், அலங்கார விளக்குகள், திரைச்சீலைகள் உள்ளிட்ட, பர்னிஷிங், சிசிடிவி கேமராக்கள் என மக்கள் எதிர்பார்க்கும் அத்தனையும் கண்காட்சியில் இடம் பெறுகிறது.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.திருப்பூர் மாவட்ட கட்டட பொறியாளர் சங்க செயலாளர் ராஜாகுமார், பொருளாளர் செந்தில்குமார், கண்காட்சி செயலாளர் ஜெகதீஸ்வரன், ஒருங்கிணைப்பாளர் திருமலைசாமி மற்றும் குணசேகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.விபரங்களுக்கு: 93444 45433, 98422 79069 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.