உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தேசிய நெடுஞ்சாலையோரம் மக்காத பொருட்கள் எரிப்பதா?

தேசிய நெடுஞ்சாலையோரம் மக்காத பொருட்கள் எரிப்பதா?

அவிநாசி: நான்கைந்து நாட்களாக அவிநாசி அருகே தெக்கலுாரில் இருந்து பழங்கரை வரை, சேலம் - கொச்சி பைபாஸ் சாலை மற்றும் சர்வீஸ் சாலை பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.சர்வீஸ் சாலையில் உள்ள மரங்கள், செடிகள் ஆகியவற்றை பராமரித்து காய்ந்த கிளைகள், புற்கள் மற்றும் குப்பைகள் அகற்றப்படுகின்றன. ஊராட்சிப் பகுதிகளில் கொட்டி வைத்த குப்பைகளிலிருந்து பறந்து வந்த மக்காத பாலிதீன் கவர்கள், விபத்துகளில் வாகனங்களில் இருந்து உடைந்து விழும் பிளாஸ்டிக் பொருட்கள், டயர்கள் என அனைத்தையும் சேகரித்து தீ வைக்கப்படுகின்றன.அவிநாசி மேற்கு ஒன்றிய பா.ஜ., தலைவர் பிரபு ரத்தினம், துணைத்தலைவர் ராஜசேகர், பொருளாளர் சதீஷ்குமார், சக்தி கேந்திரா பொறுப்பாளர் ரவிச்சந்திரன் மற்றும் வேலாயுதம்பாளையம் பொதுமக்கள் உள்ளிட்டோர் அவிநாசி, மங்கலம் ரோட்டில் உள்ள ரவுண்டானா பகுதியில் தீ வைத்து எரித்துக்கொண்டிருந்த ஊழியர்களிடம் 'தீ வைத்து எரிக்கக் கூடாது' என அறிவுறுத்தினர். ஊழியர்கள் இதற்கு மறுத்தனர். இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.சுங்கச்சாவடி மேலாளருக்கு தகவல் அளித்து மக்காத பொருட்களை எரிக்கக்கூடாது என அறிவுறுத்தும் படி கேட்டுக் கொண்டனர். ஊராட்சி பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை அமலாக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி