மேலும் செய்திகள்
கலெக்டர் உத்தரவை காற்றில் பறக்கவிட்ட டிரைவர்
25-Jan-2025
திருப்பூர்; தாராபுரம், மங்களம்பாளையம் பிரிவு பஸ் ஸ்டாப்பில் பழநி செல்ல கூடிய தனியார் பஸ்கள் நிற்காமல் செல்வதாக மக்கள் மத்தியில் தொடர்ந்து குற்றச்சாட்டு உள்ளது.நேற்று மதியம் அவ்வழியாக திருப்பூரில் இருந்து பயணிகளுடன் பழநி நோக்கி சென்ற தனியார் பஸ், ஸ்டாப்பில் நிற்காமல் சென்றது. கிராம மக்கள் பஸ் ஸ்டாப்பில் திரண்டு நின்றனர்.பழநியில் இருந்து மீண்டும் திருப்பூர் நோக்கி வந்த தனியார் பஸ்சை மக்கள் சிறைபிடித்து, மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து சென்ற அலங்கியம் போலீசார் பேச்சு நடத்தினர். அதில், பஸ் ஸ்டாப்பில் நின்று செல்லப்படும் என, உறுதியளித்த பின், மக்கள் கலைந்து சென்றனர்.
25-Jan-2025