மேலும் செய்திகள்
இன்றைய மின்தடை பகுதிகள்
21-Jul-2025
அவிநாசி; அவிநாசி அடுத்த போத்தம்பாளையம் கிராமத்துக்கு அதிகாலை 5:50; இரவு 11:00 மணிக்கு அரசு பஸ் (எண்: 9) வருகிறது. காலை 8:15 மணி; மாலை 4:30 மணிக்கு இந்த வழியாக வந்து அவிநாசி, திருப்பூர் செல்லும் வகையில், இந்த பஸ் வழித்தடத்தை மாற்றியமைக்க வேண்டும் என்று தமிழக முதல்வர், போக்குவரத்து துறை அமைச்சர், கலெக்டர், அவிநாசி எம்.எல்.ஏ., ஆகி யோருக்கு மக்கள் சேவகன் அறக்கட்டளையினர் மனு அனுப்பியுள்ளனர். பள்ளி, கல்லுாரி மற்றும் திருப்பூர், கோவை ஆகிய ஊர்களுக்கு வேலைக்கு செல்பவர்கள் என 900க்கும் மேற்பட்டோர் போத்தம்பாளையம் கிராமத்தில் வசிக்கின்றனர். நாள்தோறும் பொதுப் போக்குவரத்தான பஸ்சைத்தான் நம்பி உள்ளனர். விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.
21-Jul-2025