உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பஸ் ஸ்டாண்ட் கட்டும் பணி ஜரூர்: நிழற்குடை அமைக்க எதிர்பார்ப்பு

பஸ் ஸ்டாண்ட் கட்டும் பணி ஜரூர்: நிழற்குடை அமைக்க எதிர்பார்ப்பு

குன்னத்துார்: குன்னத்துாரில் பஸ் ஸ்டாண்ட் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. திருப்பூர் மாவட்டம், குன்னத்துார் பஸ் ஸ்டாண்ட் கட்டடம் மிகவும் சிதிலமடைந்ததால், புதிய கட்டடம் கட்ட பேரூராட்சி நிதியில் ஒரு கோடி ரூபாய் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில், 2 கோடியே 46 லட்சம் ரூபாய் என மொத்தம், 3.46 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 11 கடைகள், தாய்மார்கள் பாலுட்டும் அறை, போக்குவரத்து அலுவலர்களுக்கான அறை, நவீன குளியலறையுடன் கூடிய கழிப்பறை ஆகியன பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் கட்டப்படுகிறது. இதற்காக பழைய கட்டடத்தை அகற்றிவிட்டு புதிய கட்டடம் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருவதால், 'ஒரு ஆண்டுக்குள் புதிய பஸ் ஸ்டாண்ட் பயன்பாட்டுக்கு வரும்,' என அதிகாரிகள் தெரிவித்தனர். நிழற்குடை வசதி மக்கள் கோரிக்கை குன்னத்துாரில் பஸ் ஸ்டாண்ட் கட்டும் பணி நடந்து வருவதால், பஸ் அனைத்தும், ரோட்டிலேயே நின்று பயணிகளை இறக்கி, ஏற்றி செல்கின்றனர். இதுதவிர, பயணிகள் நின்று பஸ் ஏற போதிய நிழற்குடை வசதி இல்லை. இதனால் பயணிகள் மழையிலும், வெயிலிலும் நின்று பஸ் ஏறி செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே, புதிய பஸ் ஸ்டாண்ட் செயல்பாட்டு க்கு வரும் வரை, தற்காலிக நிழற்குடை அமைக்க பேரூராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை