உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பஸ் ஸ்டாண்ட் கும்மிருட்டு 

பஸ் ஸ்டாண்ட் கும்மிருட்டு 

திருப்பூர: 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்ட், கட்டி முடிக்கப்பட்டது. கோவை செல்லும் பஸ்கள் நிறுத்தப்படும் பகுதியில் கடந்த பல நாட்களாக விளக்குகள் எரியாமல் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.பஸ்கள் நிற்குமிடம்; பயணிகள் காத்திருக்கும் இடம்; வெளியே செல்லும் வழி என ஏறத்தாழ 30க்கும் மேற்பட்ட விளக்குகள் முற்றிலும் செயல்படாமல் உள்ளன.இதனால், அங்கு முழுமையாக இருள் மண்டிக் கிடக்கிறது. பயணிகள் அங்கு அச்சத்துடன் கடந்து செல்லும் நிலை உள்ளது. ஏற்கனவே அந்தப் பகுதியில் தான் 'குடி'மகன்கள் கூட்டம் காணப்படும். பல நாட்களாக விளக்குகள் எரியாமல் இருள் சூழ்ந்து கிடப்பதால், அவதி நிலவுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை