காலண்டர் வடிவமைப்பு
திருப்பூர் : திருப்பூர் 'நிப்ட்-டீ' கல்லுாரி மாணவியர் தாங்கள் வடிவமைத்த ஆடைகளை அணிந்து மாடலிங் செய்த மாணவியர் போட்டோவுடன் கூடிய, மாத காலண்டரை ஒவ்வொரு ஆண்டும் தயாரிக்கின்றனர்.அதன்படி, 2025ம் ஆண் டுக்கான புதிய காலண்டர் வடிவமைக்கப்பட்டு, நேற்று வெளியிடப்பட்டது. கல்லுாரி தலைமை ஆலோசகர் ராஜாசண்முகம் தலைமை வகித்தார்.கல்லுாரி தலைவர் மோகன், கல்லுாரி முதல்வர், கல்லுாரி குழு உறுப்பினர் 'மெஜஸ்டிக்' கந்தசாமி, கல்லுாரி முதல்வர் கோபாலகிருஷ்ணன், 'லக்ஸ்' நிறுவன நிர்வாகி ராகுல் உள்ளிட்டோர் காலண்டரை வெளியிட்டு, வடிவமைத்த மாணவியரை பாராட்டினர்.