அரசு கல்லுாரியில்விண்ணப்பிக்க அழைப்பு
தாராபுரம்: தாராபுரம் அரசு கல்லுாரி முதல்வர் புஷ்பலதா அறிக்கை: தாராபுரம் அரசு கல்லுாரியில் நடப்பாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு உதவி மையம் துவங்கப்பட்டுள்ளது.கல்லுாரியில், பி.ஏ., பிரிவில் தமிழ் மற்றும் ஆங்கிலம். பி.எஸ்.சி.,யில் வேதியியல், கணிதம், கணினி அறிவியல். பி.காம்., ஆகியவற்றில் மாணவர் சேர்க்கப்படுவர்.இதில் சேர விரும்புவோர் தங்களின் 10 மற்றும் 12 ம் வகுப்பு மார்க் ஷீட்; மாற்றுச் சான்றிதழ், ஜாதி சான்றிதழ்; ஆதார் அட்டை, டெபிட் கார்ட், கிரடிட் கார்ட் ஆகியவற்றுடன் கல்லுாரியை அணுகி விண்ணப்பிக்கலாம்.விண்ணப்ப கட்டணம் 50 ரூபாய்; எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவினருக்கு 2 ரூபாய். www.tngasa.inஎன்ற இணைய தள முகவரியில் வரும் 27ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களை 04258 221500 என்ற எண்ணில் பெறலாம்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.