உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தீவன பெருக்க திட்டம் பதிவு செய்ய அழைப்பு

தீவன பெருக்க திட்டம் பதிவு செய்ய அழைப்பு

திருப்பூர் : மாடுகளில் பால் உற்பத்தியை அதிகரிப்பதற்காக, நடப்பு 2024 - 25ம் நிதியாண்டில், தீவன பெருக்க திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.திருப்பூர் மாவட்டத்தில் அதிக விளைச்சல் தரும், C04/Co5 ரக கம்பு நேம்பியர் பசுந்தீவனங்களை வளர்க்க, 0.25 ஏக்கருக்கு 375 கிராம்; Co(FS)29 சோள விதைகள் மற்றும் 500 கிராம் வேலிமசால் தீவன பயிர் விதைகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது.இப்பயிர்களுக்கு, 0.25 ஏக்கருக்கு, 10 கிலோ யூரியா, 25 கிலோ சூப்பர் பாஸ்பேட், 7 கிலோ பொட்டாஷ் வழங்கப்படுகிறது. களையெடுத்தல், உரமிடுதல் மற்றும் தீர் பாசனத்துக்கு மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்துக்கு, மாவட்டத்தில் 70 ஏக்கர் தேர்வு செய்யப்பட உள்ளது.நீர்ப்பாசன வசதியில்லாத மானாவாரி நிலப்பகுதிகள் கொண்ட கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கென 0.5 ஏக்கருக்கு, 6 கிலோ மானாவாரி தீவனச்சோள விதை மற்றும் 2 கிலோ தட்டைப்பயிறு விதைகள் வழங்கப்படுகிறது; இந்த திட்டத்தில், மொத்தம் 200 ஏக்கர் தேர்வு செய்யப்படுகிறது.கால்நடைகளுக்கு தீவனம் வழங்கும் முறையில் பண்ணை செயல்பாட்டினை எளிமையாக்க, 100 தீவனப்புல் வெட்டும் கருவிகள், 50 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது. இந்த திட்டங்களில் பயன்பெற விரும்பும் கால்நடை வளர்ப்பாளர்கள், அருகாமையில் உள்ள கால்நடை மருந்தக உதவி மருத்துவரை அணுகி, பெயர் பதிவு செய்ய மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்துகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ