உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சிறுபான்மையினருக்கு கடன் விண்ணப்பிக்க அழைப்பு

சிறுபான்மையினருக்கு கடன் விண்ணப்பிக்க அழைப்பு

திருப்பூர்; சிறுபான்மையினத்தவர் சுய வேலை வாய்ப்பு பெறவும், வருமானம் பெறவும் உதவும் வகையில், பல்வேறு விதமான கடன்கள் வழங்கப் படுகிறது.திட்டம் - 1ல், குடும்ப ஆண்டு வருமானம், 3 லட்சம் ரூபாய் இருந்தால், 6 சதவீத வட்டியில், 20 லட்சம் ரூபாய் வரை கடன் பெறலாம். திட்டம் 2ல், 8 லட்சம் ரூபாய் ஆண்டு வருமான வரம்பில், ஆண்களுக்கு 8 மற்றும் பெண்களுக்கு 6 சதவீத வட்டியில், 30 லட்சம் ரூபாய் வரை கடன் பெறலாம்.கைவினை கலைஞர்களுக்கு 10 லட்சம்; மகளிர் சுய உதவி குழு உறுப்பினருக்கு ஒரு லட்சம் ரூபாய் கடன் வழங்கப்படும்.அரசு அங்கீகரித்த கல்வி நிலையங்களில் பயிலும் மாணவர்களுக்கு 20 மற்றும் 30 லட்சம் ரூபாய் கல்விக் கடன் வழங்கப்படும்.இதில் பயன்பெற, கடன் விண்ணப்பத்துடன், மதச்சான்றிதழ்; ஜாதிச்சான்றிதழ்; வருமான சான்றிதழ்; ரேஷன் அட்டை அல்லது இருப்பிடச் சான்று, ஆதார், திட்ட அறிக்கை மற்றும் கடன் வழங்கும் வங்கி கோரும் ஆவணங்கள் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும். அதே போல் கல்விக் கடனுக்கும் இவற்றுடன் கல்வி நிறுவனம் வழங்கும் சான்றிதழ்கள் இணைக்க வேண்டும். திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுபான்மை மதத்தினர், மாவட்ட பிற்பட்டோர் நல அலுவலகம்; கூட்டுறவு இணை பதிவாளர் அலுவலகம், மாவட்ட, மத்திய, தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள் ஆகியவற்றில் இந்த விண்ணப்பத்தைப் பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி