உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / போட்டித்தேர்வுகள் எழுத மாணவர் தயாராக அழைப்பு

போட்டித்தேர்வுகள் எழுத மாணவர் தயாராக அழைப்பு

பல்லடம்; பல்லடம் அரசு கல்லுாரி ஆங்கில துறை சார்பில், மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவ, மாணவியருக்கான பிரிவு உபசார விழா நடந்தது. கல்லுாரி முதல்வர் மணிமேகலை தலைமை வகித்தார். ஆங்கில துறை பேராசிரியர் கிருஷ்ணவேணி வரவேற்றார்.திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லுாரி என்.எஸ்.எஸ்., அலகு - 2 அலுவலர் பேராசிரியர் மோகன்குமார், 'இன்றைய இளைஞர் சமுதாயமே' என்ற தலைப்பில் பேசுகையில், ''இளைஞர்கள் ஒருபோதும் தவறான பாதையில் செல்லக்கூடாது. சிறந்த எதிர்காலத்தை ஒருபோதும் தொலைத்து விடக்கூடாது. போட்டித் தேர்வுகளை எழுத தயாராக இருங்கள். நல்ல எதிர்காலத்தை அமைக்க பெற்றோர், ஆசிரியர்கள் அறிவுரைகளை கேட்டு நடந்து கொள்ளுங்கள்,'' என்றார். ஆங்கிலத் துறையில் சிறந்து விளங்கிய மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கி பாராட்ட தெரிவிக்கப்பட்டது. பேராசிரியர் முகுந்தா பிரியதர்ஷினி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ