உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சப்-ஜூனியர் - சீனியர் கபடி வீரர்களுக்கு அழைப்பு

சப்-ஜூனியர் - சீனியர் கபடி வீரர்களுக்கு அழைப்பு

திருப்பூர்; திருப்பூர் மாவட்ட கபடி கழகத்தின் சார்பில், மாவட்ட சப்-ஜூனியர் மற்றும் சீனியர் கபடி அணித்தேர்வு நடக்கவுள்ளது.திருப்பூர், காங்கயம் ரோடு, மாவட்ட கபடி கழக அலுவலக மைதானத்தில் வரும், 30ம் தேதி காலை 9:00 மணிக்கு அணித்தேர்வு நடக்கிறது. மார்ச், 1, 2009க்கு பின் பிறந்த, 16 வயதுக்கு உட்பட்ட, 55 கிலோ எடைக்குள் உள்ளவர்கள், சப் ஜூனியர் பிரிவில் பங்கேற்கலாம். சீனியர் கபடி அணித்தேர்வுக்கு வயது வரம்பு இல்லை; எடை, 85 கிலோவுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.வீரர் தேர்வு, புதிய கபடி ஆடுகள விதிகளின்படி 'மேட்'டில் நடைபெறுவதால், பங்கேற்பவர் கட்டாயம் ஷூ அணிந்து வர வேண்டும். பங்கேற்க பதிவு செய்ய வயது சான்றிதழ், ஆதார், பள்ளி மாற்றுச்சான்றிதழ் ஜெராக்ஸ் அவசியம். தேர்வாகும் வீரர், அணிகளுக்கு மாவட்ட கபடி கழகத்தின் மூலம் பயிற்சி வழங்கப்பட்டு, மாநில கபடி சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க வாய்ப்பு உருவாக்கித்தரப்படும். தகுதியுள்ள கபடி வீரர்கள் அணித்தேர்வில் பங்கேற்கலாம் என, திருப்பூர் மாவட்ட கபடி கழக செயலாளர் ஜெயசித்ரா சண்முகம் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ