கவனச்சிதறலுக்கு காரணமாகலாமா?
அரசு பஸ்களில், செல்லக்கூடிய ஊர்களின் பெயர்களே தெரியாத வகையில், பஸ் முழுவதுமாக சமீபகாலமாக விளம்பரங்கள் செய்யப்படுகின்றன. தற்போது, சினிமா விளம்பரங்களும் வெளியிடப்பட்டு வருகின்றன. நெடுஞ்சாலைகளில் செல்லும் பிற வாகன ஓட்டிகளுக்கு கவனச்சிதறல் ஏற்பட்டு, விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது. அரசு பஸ்களில் இதுபோன்று விளம்பரங்கள் செய்வது, போக்குவரத்து விதிமுறைகளுக்கு உட்பட்டது தானா என்ற கேள்வி எழுந்துள்ளது.