உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / டூவீலர் மீது மோதி நிற்காமல் பறந்த கார் : துாய்மை பணியாளர் பலி; உறவினர்கள் மறியல்

டூவீலர் மீது மோதி நிற்காமல் பறந்த கார் : துாய்மை பணியாளர் பலி; உறவினர்கள் மறியல்

திருப்பூர்; தாராபுரம் அருகே டூவீலர் மீது கார் மோதிய விபத்தில் துாய்மை பணியாளர் பரிதாபமாக இறந்தார். காரை கண்டுபிடிக்க வலியுறுத்தி குடும்பத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.கரூர் மாவட்டம், பள்ள பட்டி ஏ.ஜி., நகரை சேர்ந்தவர் தங்கவேல், 52. நகராட்சியில் துாய்மை பணியாளர். இவரது மனைவி செல்வி, 40. இருவரும், டூவீலரில், தாராபுரம் அருகே உள்ள குமாரபாளையத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது, சின்ன மருதுார் - மூலனுார் ரோட்டில் சென்ற போது, அடையாளம் தெரியாத கார் டூவீலர் மீது மோதி விட்டு சென்றது. விபத்தில் படுகாயமடைந்த, இருவரும் நீண்ட நேரமாக உயிருக்கு போராடிய படி இருந்தனர்.அதன்பின், ஆம்புலன்ஸில், இருவரும் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிகிச்சை பலனின்றி தங்கவேல் இறந்தார். செல்வி திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூலனுார் போலீசார் விசாரித்தனர்.விபத்து ஏற்படுத்தி சென்ற காரையும், அதில் சென்ற நபர்களையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி தாராபுரம் அரசு மருத்துவமனை முன் ரோட்டில் சாலை மறியலில் குடும்பத்தினர், உறவினர்கள் ஈடுபட்டனர்.தாராபுரம் போலீசார் பேச்சு நடத்தினர். காரை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து, விபத்து ஏற்படுத்திய காரை, சேலத்தில் போலீசார் கண்டு பிடித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

BALU
ஜூலை 15, 2025 13:07

நான் திருப்பூர் சின்னக்கரையிலிருந்து உள்ளே தொட்டிஅப்பூச்சி கோவில்,அறிவொளி நகர் உள்ளது அங்கிருந்து இந்த செய்தியை அனுப்புகிறேன். பல்லடத்திலிருந்து, கல்லம்பாளையம்,நாரணபுரம், சேடபாளையம் வழியே வரும் பேருந்து பேருந்து நம்பர்.30. நான் பலமுறை இந்த செய்தியை சொல்லி இருக்கிறேன் எந்த விதமான நடவடிக்கை எங்கள் ஊர் எம்.எல்.ஏ., எம்.பி., வார்டு உறுப்பினர்கள் எல்லோரும் இருந்தும் எந்தவிதமான நடவடிக்கை எடுக்கவில்லை, எங்கள் ஊரில் தான் வசூல் அதிகம், சரியான நேரத்திற்கு பேருந்து வருவதில்லை,சில நேரங்களில் பேருந்து வருவதில்லை, நாங்கள் என்ன சொல்கிறோம் என்றால் அரசு பேருந்து விட முடியவில்லை என்றால் தனியார் பேருந்துக்கு வழி விடுங்கள். 15.07.2025 இன்று காலை 8.30 நாங்கள் எப்பொழுதும் போல பேருந்திற்க்காக காத்து இருந்தோம் காலை 8.30AM வரவேண்டிய பேருந்து 8.40AM வந்தது, வந்த பேருந்து ஆறுமுத்தம்மாபாளையம் தாண்டி பேருந்து ஷார்ட் ஆகாமல் நின்றுவிட்டது. பேருந்து இடையில் நின்றுவிட்டதால் பொது மக்கள் எப்படி வேலைக்கு காலேஜ்,ஸ்கூல் மாணவ,மாணவிகள் எப்படி போவார்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை