பார் உரிமையாளர் மீது வழக்கு
திருப்பூர்; மதுக்கடை 'பாரில்' மது விற்றவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.திருப்பூர், டீச்சர்ஸ் காலனி (மதுக்கடை எண்:3536) மற்றும் கொங்கு மெயின் ரோடு, இ.எஸ்.ஐ., மருத்துவமனை அருகே உள்ள மதுக்கடை (எண்: 1909) பாரில் மதுபாட்டில் பதுக்கி விற்று வந்த சரத்குமார், குமரேசன் ஆகியோரை திருப்பூர் வடக்கு போலீசார் கைது செய்து, 94 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். பார் உரிமையாளர்கள் முருகன், கார்த்திக் மீது வழக்குப்பதிவு செய்து, உரிமையை ரத்து செய்ய போலீசார் பரிந்துரை செய்துள்ளனர்.