உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ரோட்டில் சிமென்ட் கலவை; சுத்தம் செய்த போலீசார்

ரோட்டில் சிமென்ட் கலவை; சுத்தம் செய்த போலீசார்

திருப்பூர்; நேற்று, திருப்பூர், அவிநாசி ரோடு வழியாக சிமென்ட் கலவை ஏற்றிய லாரி சென்றது. லாரியில் இருந்து குமார் நகர் பகுதியில் ஆங்காங்கே சிமென்ட் கலவை கொட்டியபடி சென்றது. குமார் நகர் சிக்னலில் ஆரம்பித்து தீயணைப்பு நிலையம் வரை கலவை கொட்டியிருந்தது.இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். பணியில் இருந்த கொங்கு நகர் போக்குவரத்து போலீசார் உடனடியாக ரோட்டில் கொட்டியிருந்த கலவையை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். பணியாளர்களை அழைத்து வந்து, அவர்களுடன் போலீசாரும் சேர்ந்து அப்புறப்படுத்தி, ரோட்டை சுத்தம் செய்தனர். போலீசாரின் இச்செயல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ