உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சென்சுரி பள்ளி ஆண்டு விழா

சென்சுரி பள்ளி ஆண்டு விழா

திருப்பூர்; திருப்பூர், ராக்கியாபாளையத்தில் உள்ள சென்சுரி பவுண்டேசன் பப்ளிக் பள்ளியில் எட்டாவது ஆண்டு விழா நடந்தது. தாளாளர் சக்திதேவி தலைமை தாங்கினார். அறங்காவலர் மனோகரன் வரவேற்றார். முதல்வர் மாயா வினோத் ஆண்டறிக்கை வாசித்தார். ஈஷா கார்மென்ட்ஸ் இயக்குனர் சாதிக் அலி சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார். கடந்தாண்டு பொதுத்தேர்வில் சாதித்த மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவ மாணவியர் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை