உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தெற்கு குறுமைய விளையாட்டு; வெற்றிகளை குவித்த சென்சுரி பள்ளி

தெற்கு குறுமைய விளையாட்டு; வெற்றிகளை குவித்த சென்சுரி பள்ளி

திருப்பூர்; பள்ளிக்கல்வித்துறை சார்பில், திருப்பூர் தெற்கு குறுமைய அளவிலான பள்ளி மாணவர்களுக்கான குழு மற்றும் தடகள போட்டி, சர்க்கார் பெரியபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடத்தப்பட்டது. திருப்பூர் சென்சுரி பள்ளி மாணவர்கள், பல்வேறு போட்டிகளில் வெற்றிகளை குவித்தனர். 14 வயது பிரிவு மாணவர் பிரிவு, டேபிள் டென்னிஸ் ஒற்றையர், இரட்டையர் பிரிவு மற்றும் ஹாக்கி விளையாட்டில் முதலிடம்; சதுரங்க போட்டியில், மாணவன் பிரணவ் மித்ரன் முதலிடம்; முகமது அயான், 100 மீ., ஓட்டத்தில் முதலிடம்;சதுரங்க போட்டியில், அஜிதா இரண்டாமிடம், மாணவியர் பிரிவு, ஹாக்கி மற்றும் டேபிள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் இரண்டாமிடம். 17 வயது பிரிவு மாணவர் ஹாக்கி, கால்பந்தில், முதலிடம், டேபிள் டென்னிஸில் இரண்டாமிடம், சதுரங்க போட்டியில், மாணவர் ஸ்ரீராம், இரண்டாமிடம்; மும்முறை தாண்டுதலில் மாணவன் யத்தின், ஈட்டி எறிதலில் லோகித், கம்பு ஊன்றி தாண்டுதலில் சர்வந்த் ஆகியோர் முதலிடம். சஞ்சித், உயரம் தாண்டுதலில் இரண்டாமிடம், மும்முறை தாண்டுதலில் மூன்றாமிடம்; தடை தாண்டும் ஓட்டத்தில், சபரி இரண்டாமிடம். மாணவியர் பிரிவு ஹாக்கியில் முதலிடம்; டேபிள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் இரண்டாமிடம். 19 வயது பிரிவு மாணவர், மாணவி ஹாக்கியில் முதலிடம். டேபிள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் இரண்டாமிடம். மாணவியர் கூடைப்பந்தில் முதலிடம். கால்பந்து மற்றும் டேபிள் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் இரண்டாமிடம். ரிதன்யா, நீளம் தாண்டுதல், 200 மற்றும் 100 மீ., ஓட்டத்தில் முதலிடம் பெற்று, 15 புள்ளிகளுடன் தனி நபர் சாம்பியன் பட்டத்தையும் தக்க வைத்தார். அதே போன்று, மாணவி அஸ்மிதா, 100 மீ., தடை தாண்டும் ஓட்டம், உயரம் தாண்டுதல், 400 மீ., தடை தாண்டும் ஓட்டத்தில் முதலிடம் பெற்று, 15 புள்ளிகளுடன் தனிநபர் சாம்பியன் பட்டம் பெற்றார். இதுதுவிர, 11 வயது மாணவியர் பிரிவில், சதுரங்கத்தில் மாணவி குழலி, இரண்டாமிடம் பெற்றார். குறுமைய அளவில் வெற்றி பெற்று, மாவட்ட அளவில் விளையாட தேர்வாகியுள்ள சென்சுரி பள்ளி மாணவர்கள், பயிற்சியாளர்கள் பாலசுப்பிரமணியன், குணசீலன், கார்த்திக் பிரசாந், குருவிகாஷ் ஆகியோரை பள்ளி தாளாளர் சக்திதேவி, பள்ளி முதல்வர் ெஹப்சிபா பால் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை