உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பாலா ஆர்த்தோ மருத்துவமனை யில் சவாலான ஆபரேஷன் வெற்றிகரம்

பாலா ஆர்த்தோ மருத்துவமனை யில் சவாலான ஆபரேஷன் வெற்றிகரம்

திருப்பூர் : திருப்பூர் பாலா ஆர்த்தோ மருத்துவமனையில் பல்வேறு சவாலான அறுவை சிகிச்சைகள் மேற்கொண்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது.திருப்பூர், தாராபுரம் ரோட்டில், அரசு மருத்துவமனை எதிரில் பாலா ஆர்த்தோ மருத்துவமனை செயல்படுகிறது. திருப்பூரில் ரோபோடிக் முறையிலான அதி நவீன மூட்டு மாற்று அறுவை சிகிச்சையை முதன் முறையாக இம் மருத்துவமனை அறிமுகப்படுத்தியுள்ளது.இது குறித்து மருத்துவமனை நிர்வாக இயக்குநர் டாக்டர் பாலசுப்ரமணியம் கூறியதாவது:அதிநவீன ரோபோடிக் முறையிலான அறுவை சிகிச்சைகள் துல்லியமான முறையில் மேற்கொள்ளப்படுகிறது. அனைத்து விதமான வசதிகள், மருத்துவ உபகரணங்கள், கைதேர்ந்த நிபுணர் குழு, மருத்துவ ஊழியர்கள், வெற்றிகரமான மருத்துவ சரித்திரம் ஆகியன, திருப்பூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்களிலிருந்தும், வெளி நாடுகளிலிருந்தும் இங்கு வந்து நோயாளிகள் சிகிச்சை பெற்று குணமடைந்து செல்கின்றனர்.சமீபத்தில், விருத்தாசலத்தை சேர்ந்த சேட்டு, 63, என்பவருக்கு, வெற்றிகரமாக வலது முழங்கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்த சிகிச்சை பெற்றவர்கள் நீண்ட நாட்களுக்குப் பின்னரே தரையில் உட்கார முடியும். ஆனால், இவர் 2வது நாளே தரையில் சம்மணமிட்டு அமர்ந்தார். இது மருத்துவ துறையில் மிகவும் அபூர்வம்.அதேபோல் மலேஷியாவிலிருந்து கணேசன், 60, தாய்லாந்திலிருந்து அலாவுதீன் 30, ஆகியோரும் அறுவை சிகிச்சை செய்து பயனடைந்துள்ளனர். இது போல் பல்வேறு சவாலான அறுவை சிகிச்சைகளையும் எங்கள் மருத்துவமனையில் சிறப்பான முறையில் மேற்கொள்கிறோம். முதல்வர் காப்பீடு திட்டத்திலும் இந்த சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகிறது.விவரங்களுக்கு 91343 43535, 90868 69696 எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ