உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / முதலமைச்சர் திறனாய்வு தேர்வு இன்று நடக்கிறது

முதலமைச்சர் திறனாய்வு தேர்வு இன்று நடக்கிறது

உடுமலை, ; பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான முதலமைச்சர் திறனாய்வுத்தேர்வு, உடுமலையில் இன்று நடக்கிறது.அரசுப்பள்ளிகளில் படிக்கும் மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு, முதலமைச்சர் திறனாய்வு தேர்வு நடக்கிறது. இத்தேர்வில் வெற்றி பெறுவோருக்கு, மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகையாக வழங்கப்படுகிறது.நடப்பு கல்வியாண்டில் இத்தேர்வு பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும் நடக்கிறது. இத்தேர்வு இன்று நடக்கிறது. உடுமலையில், பாரதியார் நுாற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகள் தேர்வு மையங்களாக உள்ளன. உடுமலை, குடிமங்கலம் மற்றும் மடத்துக்குளம் அரசு பள்ளிகளிலிருந்து மொத்தமாக, 640 மாணவர்கள் இத்தேர்வினை எழுதுகின்றனர். சோழமாதேவி அரசு உயர்நிலைபள்ளி தலைமையாசிரியர் முருகன், தேர்வு முதன்மை கண்காணிப்பாளராக செயல்படுகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி