முதல்வர் கோப்பை ஜூடோ; கல்லுாரி மாணவர்கள் அசத்தல்
திருப்பூர்; முதல்வர் கோப்பை கோவை மண்டல அளவிலான ஜூடோ போட்டியில் மாணவர் பிரிவில், பல்வேறு எடைப்பிரிவுகளில் முதலிடம் பெற்றவர்கள் விவரம்: இதில், 50 கிலோ எடைப்பிரிவில், கோவையைச் சேர்ந்த தீபக், 55 கிலோ எடைப்பிரிவில் திருப்பூரைச் சேர்ந்த கார்த்திக், 60 கிலோ எடைப்பிரிவில், சேலத்தை சேர்ந்த மனோஜ், 66 கிலோ எடைப்பிரிவில், கோவையைச் சேர்ந்த முபரீஷ், 73 கிலோ எடைப்பிரிவில் கோவையைச் சேர்ந்த தீபன், 73 கிலோவுக்கு அதிகமான எடைப்பிரிவில், நாமக்கலை சேர்ந்த அஜய் ஆகியோர் வெற்றி பெற்றனர். மாணவியர் பிரிவு 48 கிலோ எடைப்பிரிவில், கோவையைச் சேர்ந்த சஞ்சனா, 52 கிலோ எடைப்பிரிவில், சேலத்தை சேர்ந்த சாதனா, 57 கிலோ எடைப்பிரிவில், திருப்பூரைச் சேர்ந்த தாரா, 63 கிலோ எடைப்பிரிவில், சேலத்தை சேர்ந்த பிரதிக்ஷா, 70 கிலோ எடைப்பிரிவில், நாமக்கலை சேர்ந்த ஜோஷிகா, 70 கிலோவுக்கு மேல் உள்ளோர் எடைப்பிரிவில், நாமக்கலை சேர்ந்த திஷா ஆகியோர் முதலிடம் பெற்றனர். நேற்று, கல்லுாரி மாணவ, மாணவியருக்கான ஜூடோ போட்டி நடத்தப்பட்டது. இதில், 129 மாணவர்கள், 126 மாணவியர் பங்கேற்று, மோதினர்.