உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / முதல்வர் கோப்பை வாள்வீச்சு விருக்ஷா மாணவி அபாரம்

முதல்வர் கோப்பை வாள்வீச்சு விருக்ஷா மாணவி அபாரம்

திருப்பூர்: சென்னையில் நடந்த முதல்வர் கோப்பைக்கான வாள்வீச்சுப்போட்டியில், திருப்பூர், வீரபாண்டி, விருக்ஷா சர்வதேசப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் ஸ்ரீவர்ஷினி, மாநில அளவில் மூன்றாமிடம் பிடித்தார்; வெண்கலப்பதக்கம் மற்றும் ஐம்பதாயிரம் ரொக்கப்பரிசையும் பெற்றார். மாணவியை கலெக்டர் கிறிஸ்துராஜ் பாராட்டினார். மாவட்ட விளையாட்டுத்துறை அலுவலர் ரகுகுமார், மாவட்ட வாள்வீச்சு பயிற்சியாளர் மயில்சாமி ஆகியோரும் பாராட்டினர். பள்ளி தாளாளர் ராஜலட்சுமி, நிர்வாக இயக்குனர் கோவிந்தராஜன், முதல்வர் ேஹமலதா உள்ளிட்டோர் மாணவியை வரவேற்று உற்சாகப்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை