உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சிக்கண்ணா கல்லுாரி; கவுன்சிலிங் தேதி அறிவிப்பு

சிக்கண்ணா கல்லுாரி; கவுன்சிலிங் தேதி அறிவிப்பு

திருப்பூர்; திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன் அறிக்கை:கல்லுாரியில், தமிழ் மற்றும் ஆங்கில இலக்கியம், பொருளியல், வரலாறு, பி.காம் பி.காம்.சி.ஏ., பி.பி.ஏ., பி.காம் ஐ.பி., இயற்பியல், வேதியியல், விலங்கியல், ஆடை வடிவமைப்பு நாகரிகம், கணினி அறிவியல் உள்ளிட்ட பாடங்கள் உள்ளது.இரண்டாம் ஷிப்டாக (பகல் முதல் மாலை வரை) கணினி அறிவியல், பி.காம், பி.காம் சி.ஏ., சர்வதேச வணிகவியல், பி.சி.ஏ., கணிதம் உள்ளிட்ட பாடங்களில் மொத்தம், 1,008 இடங்கள் உள்ளது.விண்ணப்பித்தவர்களை இட ஒதுக்கீடு மற்றும் மதிப்பெண்கள் அடிப்படையில் பிரித்து, கல்லுாரி இணையதளத்தில் www.cgac.inதரவரிசைப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.விண்ணப்பித்தவர்கள் தங்கள் விண்ணப்ப எண்ணைக் இணையதளத்தில் உள்ளீடு செய்து, தங்களின் தரவரிசையை நிலையை அறிந்து, கவுன்சிலிங்குக்கு தயாராக வேண்டும்.ஜூன், 2 மற்றும், 3ல் மாற்றுத்திறனாளி, விளையாட்டுப்பிரிவு, முன்னாள் ராணுவத்தினரின் குழந்தைகள், தேசிய மாணவர் படை 'ஏ' சான்றிதழ் பெற்றவர்களுக்கு சிறப்பு ஒதுக்கீடு கவுன்சிலிங் நடக்கிறது.வணிகவியல் மற்றும் கலைப் பாடப் பிரிவு களுக்கான கவுன்சிலிங் ஜூன், 4ல் துவங்குகிறது. அறிவியல் பாடப் பிரிவுகளுக்கு, ஜூன், 9, தமிழ் இலக்கியம், 12ம் தேதி, ஆங்கில இலக்கியம், 13ம் தேதி கவுன்சிலிங்துவங்குகிறது.

தாமதம் வேண்டாம்

கவுன்சிலிங் வரும் போது, ஆன்லைனில் விண்ணப்பித்து, பதிவிறக்கம் செய்த விண்ணப்பம் கட்டாயம் கொண்டு வர வேண்டும். பிளஸ் 1, பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச்சான்றி தழ், சாதிச்சான்றிதழ், ஆறு பாஸ்போர்ட் போட்டோ, பாடப்பிரிவுக்கான கட்டணத்தொகை அவசியம்.அசல் சான்றிதழ்கள் இல்லையெனில், கவுன்சிலிங் பங்கேற்க இயலாது. உரிய நேரத்தில் கவுன்சிலிங்கில் பங்கேற்காமல் தாமதமாக வந்தால், அந்த நேரத்தில் பாடப்பிரிவுகளில் இருக்கும் இடங்களின் அடிப்படையிலேயே தகுதியுள்ள பிரிவுகளில் சேர்க்கை நடைபெறும்; தாமதம் தவிர்க்கப்பட வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி