உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  அவிநாசியில் சித்திரைத் தேரோட்டம்; ஏற்பாடுகள் கோலாகலம்

 அவிநாசியில் சித்திரைத் தேரோட்டம்; ஏற்பாடுகள் கோலாகலம்

அவிநாசி:அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் சித்திரைத் தேரோட்டம் ஏப்ரல் 28 நடக்கிறது. கொங்கேழு சிவாலயங்களில் முதன்மையானதும், ஆசியாவிலேயே மூன்றாவது பெரிய தேரைக் கொண்டதுமான அவிநாசி ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா, கடந்த 21-ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான நாயன்மார்களுக்குக் காட்சியளிக்கும் வைபவம் நேற்றுமுன்தினம் நடந்தது. விழாவின் சிகர நிகழ்ச்சியான பெரிய தேரோட்டம் (28ம் தேதி) காலை 9:00 மணியளவில் தொடங்குகிறது. வடக்கு ரத வீதியிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் 'அரோகரா... நமச்சிவாய...' கோஷங்கள் முழங்க வடம் பிடித்து இழுக்க, முதல் நாள் தேரோட்டம் நடைபெறுகிறது. தொடர்ந்து 29-ம் தேதி இரண்டாம் நாள் தேரோட்டமும், 30-ம் தேதி அம்மன் தேர் மற்றும் சுப்ரமணியர், கரி வரதராஜ பெருமாள் தேரோட்டங்களும் நடைபெறவுள்ளன. மே 1-ம் தேதி பரிவேட்டையும், 2-ம் தேதி இரவு தெப்பத்தேர் உற்சவமும் நடைபெறுகிறது. வரும் மே 4-ம் தேதி மஞ்சள் நீர் மற்றும் மயில்வாகனக் காட்சியுடன் இந்த ஆண்டுக்கான சித்திரை தேர்த்திருவிழா இனிதே நிறைவு பெறுகிறது. இதற்கான விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் மேற்கொண்டுள்ளன. --- 3 படங்கள் அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் சித்திரைத் தேர்த்திருவிழா, ஆறாம் நாள் நிகழ்ச்சி நேற்று நடந்தது. கற்பக விருட்ச வாகனம் மற்றும் வெள்ளை யானை வாகனத்தில் எழுந்தருளி ஸ்ரீசந்திரசேகரப்பெருமான் - ஸ்ரீஆனந்தவல்லித் தாயார் நான்கு ரத வீதிகளிலும் உலா வந்தனர். ஆறாம் நாள் நிகழ்ச்சி சித்திரை தேர்த்திருவிழாவின் ஆறாம் நாள் நிகழ்ச்சியாக, நேற்று கருணாம்பிகை சேவா டிரஸ்ட் சார்பில் கற்பக விருட்ச வாகன ஊர்வலம் நடைபெற்றது. ஸ்ரீ சந்திரசேகர பெருமான் மற்றும் ஸ்ரீ ஆனந்தவல்லி தாயார் அலங்கரிக்கப்பட்ட கற்பக விருட்ச வாகனத்தில் எழுந்தருளி நான்கு ரத வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். கருணாம்பிகை சேவா டிரஸ்ட் கவுரவத் தலைவர் ராஜகோபால், தலைவர் ஆண்டவர் ராமசாமி, செயலாளர் திருமகள் பிரின்டர்ஸ் குமரேஷ், பொருளாளர் திருநாவுக்கரசு, ஒருங்கிணைப்பாளர் திருமால் டெக்ஸ் சிவசுப்பிரமணி மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின், தேவேந்திர குல வேளாளர் சமூக மண்டப அறக்கட்டளை சார்பில் வெள்ளை யானை வாகனத்தில் ஸ்ரீ ஆனந்தவல்லி தாயார் - சந்திரசேகர பெருமாள் திருக்கல்யாண உற்சவத்தில் எழுந்தருளி அருள்பாலித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை