உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம்: கிலோ ரூ. 66க்கு விற்பனை

விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம்: கிலோ ரூ. 66க்கு விற்பனை

உடுமலை: மடத்துக்குளம் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நடந்த தேங்காய் ஏலத்தில், கிலோ ரூ.66க்கு விற்பனையானது. மடத்துக்குளம் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், இ-நாம் திட்டத்தின் கீழ் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில், தேங்காய் மற்றும் கொப்பரை ஏலம் நடந்து வருகிறது. நேற்று நடந்த ஏலத்திற்கு, 1,994 கிலோ எடையுள்ள, 4,504 தேங்காய்களை, 19 விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். ஏழு விவசாயிகள் பங்கேற்ற நிலையில், ஒரு கிலோ தேங்காய் அதிகபட்சமாக, ரூ. 66க்கும், குறைந்த பட்சமாக, ரூ. 62 என சராசரியாக, ரூ.64 க்கு விற்பனையானது. இதன் மதிப்பு, ஒரு லட்சத்து, 27 ஆயிரத்து, 578 ஆகும். அதே போல், தேங்காய் பருப்பு ஏலத்திற்கு, 23 விவசாயிகள், 23 மூட்டை அளவுள்ள, 503.75 கிலோ கொப்பரை கொண்டு வந்திருந்தனர். இதில், ஏழு வியாபாரிகள் பங்கேற்று, தரத்திற்கு ஏற்ப, அதிக பட்சமாக, கிலோ ரூ. 216க்கும், குறைந்த பட்ச விலையாக, ரூ. 180 என, சராசரியாக, ரூ. 210 க்கு விற்பனையானது. இதன் மதிப்பு, ஒரு லட்சத்து, ஆயிரத்து, 556 ஆகும், என ஒழுங்கு முறை விற்பனை கூட அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி