கோவை - நாகர்கோவில் ரயில் வழித்தடம் இன்று மாற்றம்
திருப்பூர்; மதுரை கூடல் நகர் ரயில்வே யார்டில் பராமரிப்பு பணி நடப்பதால், கோவை - நாகர்கோவில் ரயில் இரு மார்க்கத்திலும் இன்றும், வரும், 11ம் தேதியும் வழித்தடம் மாற்றப்பட்டுள்ளது.நாகர்கோவிலுக்கு இருந்து கோவைக்கு வரும் தினசரி ரயில் (எண்:16321) விருதுநகரில் இருந்து மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக மாற்று வழித்தடத்தில் கரூருக்கு இயக்கப்படும்.வழக்கமான வழித்தடமான திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை, சோழவந்தான், கொடை ரோடு, அம்பாத்துறை, பாளையம், எரியோடு, திண்டுக்கல் வழியில் பயணிக்காது. இன்று காலை மற்றும், வரும், 11 ம் தேதி கோவையில் இருந்து நாகர்கோவிலுக்கு இயக்கப்படும் ரயில் (எண்:16322) மேற்கண்ட வழித்தட மாற்றத்தில் இயங்கும். இத்தகவலை தெற்கு ரயில்வே, சேலம் கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.