உள்ளூர் செய்திகள்

கலெக்டர் ஆய்வு

பல்லடம் : பல்லடம், பொங்கலூர் ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில், தமிழக அரசின் கனவு இல்லம் திட்டம் உட்பட பல்வேறு திட்ட பணிகள் நடந்து வருகின்றன.இது குறித்து நேற்று ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் கூறுகையில், ''2024--25ம் ஆண்டு, 1,411 பயனாளிகளுக்கு, 49.38 கோடி ரூபாய் மதிப்பு மற்றும் ஊரக வீடுகள் பழுதுபார்க்கும் திட்டத்தின் கீழ், 2,093 பயனாளிகளுக்கு, 15.30 கோடி ரூபாய் மதிப்பு என, மொத்தம், 3,504 பயனாளிகளுக்கு, 64.69 கோடி ரூபாய் மதிப்பிலும் ஆணை வழங்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. மேலும், 2025--26ம் ஆண்டு, 1,772 பயனாளிகளுக்கு, 54.93 கோடி ரூபாய் மதிப்பில் கனவு இல்லம், ஊரக வீடுகள் பழுது பார்க்கும் பணிகளும் நடந்து வருகின்றன,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி